வெற்றிமாறனுடன் இணையும் ராகவா லாரன்ஸ் ! Raghava Lawrence Next Movie With Vetrimaaran

வெற்றிமாறனுடன் இணையும் ராகவா லாரன்ஸ் !

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து 'அதிகாரம்' என்ற படத்தை தயாரிக்க உள்ளனர். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின் இணையும் கூட்டணி !

பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்குப் பிறகு இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் - வெற்றிமாறன் ஆகிய இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் இணைந்துள்ளனர். மேலும் இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகிறது. இது ஒரு பான் இந்தியா படமாக உருவாகும் எனவும் தெரிவித்துள்ளனர். படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் கதையை கேட்டு பிரமித்த ராகவா லாரன்ஸ் !

“வெற்றிமாறன் சார் கூறிய 'அதிகாரம்' படத்தின் திரைக்கதையை கேட்டு பிரமித்துப் போனேன். அவர் எழுதியுள்ள இந்த பிரம்மாண்ட கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அருமையான கதையை எனக்களித்த வெற்றிமாறனுக்கும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் நன்றி" என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

#channel-5-bhakti#channel-5-cinema#channel-5-tamil#raghava-lawrence#raghava-lawrence-adhigaaram#raghava-lawrence-adhigaaram-movie-update#raghava-lawrence-audio-launch#raghava-lawrence-audio-songs#raghava-lawrence-joins-vetrimaaran-movie#raghava-lawrence-rudhran#raghava-lawrence-rudhran-audio-launch#raghava-lawrence-rudran#raghava-lawrence-speech#raghava-lawrence-speech-rudhran-audio-launch#rudhran-raghava-lawrence#vetrimaaran#vetrimaaran-lawrence-movie#vetrimaaran-raghava-lawrence