அனல் பறக்கும் பிரச்சாரங்கள் – வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு!

அனல் பறக்கும் பிரச்சாரங்கள் – வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு! 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

அதிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பரப்புரையைத் தொடங்கிய ஸ்டாலின், இரவு 10 மணிக்கு சென்னை எண்ணூரில் பிரச்சாரத்தை முடித்தார்.

ஓசூரில் பரப்புரையை முடித்துக்கொண்டு, மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தி.நகர் ஆகிய தொகுதிகளில் சாலை வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வீதி வீதியாக மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

பின்னர் இரவில் திருவொற்றியூர் நெட்டுக்குப்பத்தில் மீனவர் ஒருவரது வீட்டில் மீன் உணவு அருந்தினார்.

இன்று காலையில் அண்ணா நகருக்குப் புறப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த பதிவில்,“கருத்துக்கணிப்புகள், மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! வெல்வோம் 200; படைப்போம் வரலாறு!” என்று உறுதியுடன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் மு.க.ஸ்டாலின், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.

#cm-mk-stalin#cm-mk-stalin-angry-speech#cm-mk-stalin-speech#cm-stalin#cm-stalin-news#dmk-mk-stalin#eps-vs-stalin#mk-stalin#mk-stalin-angry-moment#mk-stalin-angry-speech#mk-stalin-anthem#mk-stalin-assembly-speech#mk-stalin-dmk-candidate-list-2026#mk-stalin-latest-speech#mk-stalin-live#mk-stalin-manifesto-2026#mk-stalin-news#mk-stalin-second-term#mk-stalin-speech#mk-stalin-videos#mk-stalin-vs-vijay#mkstalin#modi-vs-stalin#stalin#stalin-anthem#stalin-slams-bjp#stalin-slams-eps#stalin-vs-vijay