அதிமுகவுக்கு வலுக்கும் ஆதரவு – அடுத்தடுத்து இணைந்து வரும் நிர்வாகிகள்

அதிமுகவுக்கு வலுக்கும் ஆதரவு – அடுத்தடுத்து இணைந்து வரும் நிர்வாகிகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் கொங்கு தமிழர் எழுச்சி பேரவை அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.  

புரட்சித் தமிழர் எடப்பாடி கே.பழனிச்சாமியை சந்தித்த கொங்கு தமிழர் எழுச்சி பேரவையினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொங்கு தமிழர் எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர் கொங்கு சங்கர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.  

இதனைத்தொடர்ந்து, டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். லீமா ரோஸ் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு கழக துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, கழக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி உடன் இருந்தனர்.

கழகத்திலே அடிப்படை தொண்டர்கள் அடிமட்ட மக்களுக்காக தங்களது எதிர்கால பணி சிறப்பாக அமைய வேண்டும் என லீமா ரோஸ் கேட்டுக் கொண்டார். கழகதத்தில் இணைந்த 100க்கும் மேற்பட்டோறோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  

தற்போது 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இன்னும் பல பேர் அதிமுகவில் இணைவதற்கு தயாராக உள்ளனர். பெண்களுக்கென 50 சதவீதம் ஒதுக்கீடு செய்தவர் அண்ணன் எடப்பாடியார். அம்மையார் ஜெயலலிதாவை வைத்து தான் பெண்கள் தைரியமாக வெளியில் வந்திருக்கிறோம். கழக பொதுச்செயலாளரோடு இணைந்து மக்களுக்கு பல சேவைகளை செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

#admk#admk-bjp-alliance#admk-bjp-kootani#admk-edappadi-palanisamy#admk-latest-news-in-tamil#admk-live#admk-maanadu#admk-news#admk-news-tamil#admk-party-news#admk-pothukuzhu#admk-troll#admk-updates#admk-vs-dmk#admk-vs-sengottaiyan#aiadmk#aiadmk-bjp#aiadmk-bjp-alliance#aiadmk-breaking-news#aiadmk-latest-news#aiadmk-party-news#aiadmk-press-meet#aiadmk-speech#aiadmk-vs-vijay#babu-murugavel-admk#bjp-admk-news#bjp-dmk-admk-debate#dmk#dmk-vs-admk#dmk-vs-aiadmk#eps#eps-about-vijay#eps-live#eps-mgr-comment#eps-slams-mk-stalin#eps-speech#eps-vs-sengottaiyan-admk-sengottaiyan-crisis#pm-mannan-aiadmk#pm-mannan-joins-aiadmk#ttv-dhinakaran-admk#tvk-vs-admk#vaigai-selvan-aiadmk#vijay-vs-aiadmk