பெண்களை பாதுகாக்க இந்திய அரசு கொண்டு வந்த 5 சட்டங்கள் | 5 Important Laws in India That Protect Women’s Rights

பெண்களை பாதுகாக்க இந்திய அரசு கொண்டு வந்த 5 சட்டங்கள் | 5 Important Laws in India That Protect Women’s Rights

பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தவே இந்த சட்டத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது

1.குடும்ப வன்முறையிலிருந்து பெண்கள் பாதுகாப்பு சட்டம்(2005)

இச்சட்டம் குடும்பத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல், மன, பாலியல் மற்றும் பொருளாதார வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் பாதுகாப்பு உத்தரவு, பராமரிப்பு தொகை மற்றும் தங்குமிடம் போன்ற உதவிகளை பெறலாம்.

2.வேலை இடங்களில் பெண்கள் மீது பாலியல் தொல்லை தடுப்பு சட்டம்(2013)

இந்தச் சட்டம் வேலை இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்க உருவாக்கப்பட்டது. அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் புகார் குழு அமைப்பது கட்டாயம். பெண்கள் பாதுகாப்பான வேலை சூழலில் பணியாற்ற உரிமை பெற்றுள்ளனர். புகார் அளித்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.வரதட்சணை தடுப்புச் சட்டம்(1961)

இந்தச் சட்டத்தின் படி, திருமணத்தில் வரதட்சணை கேட்பது, கொடுப்பது அல்லது பெறுவது சட்டவிரோதமாகும். இது பெண்களை வரதட்சணை காரணமாக ஏற்படும் வன்முறைகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. சட்டத்தை மீறினால் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படும்.

4.பெண்களை அவமதிக்கும் வகையில் காட்டுதல் தடுப்பு சட்டம்(1986)

இந்தச் சட்டம் பெண்களை அவமதிக்கும் விதமான விளம்பரம், பத்திரிகை, திரைப்படம் அல்லது பிற ஊடகங்கள் தடுப்பதை நோக்கமாக வைத்து. பெண்களின் மதிப்பையும் பொது மரியாதையையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்கள் கடுமையான அபராதம் அல்லது தண்டனைக்கு உட்படும்.

5. கர்பக்கால நலத்திட்டங்கள்(1961)

இந்த சட்டம் கர்ப்பிணி பெண்களுக்கு 26 வாரம் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு, பாதுகாப்பான வேலை சூழல், மற்றும் குழந்தை பராமரிப்பு உதவிகளை உறுதி செய்கிறது. பெண்கள் உடல், மனநலம் மற்றும் குடும்ப நலன்களுடன் வேலை செய்யும் உரிமை பெறுகிறார்கள்.

#domestic-violence-law-india-women#important-laws-for-women-in-india#indian-constitution-rights#indian-government-schemes-for-women#indian-law-awareness#indian-legal-rights-for-women-safety#indian-women-safety-rules#laws-protecting-women-against-harassment-india#legal-awareness-for-women-india#legal-education-india#legal-knowledge-video#rights-of-women-under-indian-constitution#safety-laws-explained#social-awareness-india#women-empowerment-india#women-protection-laws-explained#women-safety-awareness#women-safety-legal-awareness-india#women-safety-tips-india#workplace-harassment-law-india