சூப்பர் ஸ்டாரின் "தலைவர் 173" படத்தை தயாரிக்கும் உலக நாயகன்

சூப்பர் ஸ்டாரின் "தலைவர் 173" படத்தை தயாரிக்கும் உலக நாயகன்

தமிழ் சினிமாவின் நீண்ட கால நெருங்கிய நண்பர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் திரையுலக வளர்ச்சிக்கு மறைந்த இயக்குனர் பாலசந்தர் முக்கியப் பங்காற்றினார். ஆரம்ப காலத்தில் இணைந்து சில படங்களில் நடித்த இவர்கள், தனி கதாநாயகர்களாக உயர வேண்டும் என்ற காரணத்தால் பேசிக்கொண்டு இனி இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தனர். இந்நிலையில், தற்போது 44 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய உள்ளது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்க, சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த அறிவிப்பை எக்ஸ் (X) தளத்தில் கமல்ஹாசன் பகிர்ந்தபோது, ரஜினி ரசிகர்கள் குறிப்பிடுவதுபோலவே தானும் அப்படத்தை 'தலைவர் 173' எனக் குறிப்பிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

#anbe-sivam#anirudh#balaji-prabu#cinema#dhananjayan#dhanush-nayan#jananayakan#kamal#kamal-kushbu#kamal-rajini#kamalhaasan#kollywood#kushboo#kushbu#lokesh-kanagaraj#nayanthara#nelson#rajini#rajini-kamal-sundar-c#rajini-kanth#rajini-kushbu#rajinikanth#red-gaint#simbu#siva-karthikeyan#str#str-49#sundar-c#sundar-c-daughter#tamil-cinema#thug-life