குடியரசுத்தலைவர் ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம்!

குடியரசுத்தலைவர் ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம்!

 

4 நாள் பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

பிரமாடம் என்கிற இடத்தில் தற்காலிகமாக தயார் செய்யப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் அங்கிருந்து பம்பை கணபதி கோவிலுக்கு கார் மூலம் ஜனாதிபதி புறப்பட்டுச் சென்றார், பம்பையில் இருந்து இருமுடி கட்டி சன்னிதானத்திற்கு சிறப்பு வாகனத்தில் திரௌபதி முர்மு சென்றார்.

இதனையடுத்து, 18ம் படி ஏறி சபரிமலை ஐயப்பனை ஜனாதிபதி தரிசனம் செய்தார். ஜனாதிபதி வருகை காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

#breaking-incident-kerala#indiaan-president-kerala-visit#indian-president-kerala-temple-visit#indian-president-visit-kerala#kerala-president-murmu#kerala-president-visit#kerela-president-visit#president#president-droupadi-murmuu-kerala-visit#president-murmu-emergency-landing-kerela#president-murmu-kerala#president-murmu-kerala-news#president-murmu-kerala-tour#president-murmu-kerala-visit#president-murmuu-kerala#president-of-india-kerala-visit#president-visit-kerala#presidential-visit-kerala