டெல்லி பயணம் சென்றுள்ள செங்கோட்டையன்

டெல்லி பயணம் சென்றுள்ள செங்கோட்டையன்

மன அமைதிக்காக ராமரை தரிசிக்க ஹரித்வார் செல்வதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

இதனையடுத்து, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து இபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைய வேண்டும். ராமரை வழிபட ஹரித்வார் செல்கிறேன். நாளை எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. நான் கலங்கி போய் விடக் கூடாது என்பதற்காக ஆதரவாளர்கள் என்னை சந்தித்து செல்கின்றனர். நீங்கள் சொன்னது நியாயமான கோரிக்கை தான் எனக் கூறினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

#admk-sengottaiyan#eps-vs-sengoottaiyan#eps-vs-sengottaiyan#k-a-sengottaiyan#ka-sengottaiyan#ka-sengottaiyan-speech#minister-sengottaiyan#sengotaiyan#sengotaiyan-latest#sengotaiyan-on-neet#sengottaiyan#sengottaiyan-admk#sengottaiyan-biography#sengottaiyan-english#sengottaiyan-interview#sengottaiyan-issue#sengottaiyan-ka#sengottaiyan-on-eps#sengottaiyan-peti#sengottaiyan-press-meet#sengottaiyan-pressmeet#sengottaiyan-speech#sengottaiyan-story#sengottaiyan-vs-eps