ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!  

ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!

 

திமுக அரசு செய்யும் பேட்ச் வொர்க் போல் இல்லாமல், மத்திய அரசு வரி விதிப்பு விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கையை துவங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில், ஜவுளி பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக, 40 நாடுகளில் தூதரக அலுவலகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, அமெரிக்க வரியால் 3 ஆயிரம் கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ஜவுளி பொருட்களை 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பான செய்தியை குறிப்பிட்டு, பதிலளித்துள்ளார்.

அதில், வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் திமுக அரசு செய்யும் பேட்ச் வொர்க் போல் இல்லாமல், மத்திய அரசு வரி விதிப்பு விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கையை துவங்கி விட்டது. அதே வேளையில், காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

#annamalai#annamalai-bjp#annamalai-bjp-announcement#annamalai-bjp-audio#annamalai-bjp-latest-speech#annamalai-bjp-speech#annamalai-ips#annamalai-news#bjp-annamalai#bjp-annamalai-latest-press-meet#bjp-annamalai-latest-speech#bjp-annamalai-latest-video#bjp-annamalai-press-meet#bjp-annamalai-press-meet-news#bjp-annamalai-pressmeet#bjp-annamalai-speech#bjp-annamalai-today-press-meet#bjp-k-annamalai#bjp-leader-annamalai-news#k-annamalai#k-annamalai-bjp#kannamalai-bjp#sp-annamalai