இந்தியாவில் 5 விமான நிலையங்கள் மூடல்!

இந்தியாவில் 5 விமான நிலையங்கள் மூடல்!

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலை தொடர்ந்து, வடமாநிலங்களில் 5 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் விமான சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் லே, ஜம்மு, அமிர்தசரஸ், தரம்சாலா ஆகிய நான்கு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட விமான நிலையங்களில் தங்கள் விமான சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மற்றொரு விமான நிறுவனமான இண்டிகோவும் தங்கள் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

விமான சேவை பாதிப்பு குறித்து சமூக வலைதளம் மூலம் பயணிகளுக்கு விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

அதை பொறுத்து பயணிகள் தங்கள் வான்வழி பயணத்தை திட்டமிடலாம் எனவும் அறிவித்துள்ளது.

மேலும், டெல்லிக்கு வடக்கே விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#air-india#air-india-flight#air-india-flight-ban#air-india-flight-food-review#air-india-stops-students-from-boarding-flight#cheapest-flight-of-india#first-class-flight-india#flight#india-pakistan#india-pakistan-conflict#india-pakistan-news#india-pakistan-tensions#india-pakistan-war#india-vs-pakistan#indian-american-ceo-worst-air-india-flight#indian-flight-enteres-pakistan-air-space#indigo-flight-attendant-fight#indigo-flights-ban#jammu-kashmir-terror-attack#kashmir-terror-attack#pahalgam-attack#pahalgam-attack-news#pahalgam-terror-attack#pahalgam-terrorist-attack#pahalgam-tourist-attack#pakistan#pakistan-attack#pakistan-flight-ban#pakistan-news#stopped-from-boarding-air-india-flight#terror-attack#terror-attack-in-pahalgam#terrorist-attack-in-pahalgam#tourist-attack-pahalgam#us-students-stopped-in-air-india-flight