அமலாக்கத்துறை குறி வைக்கும் முக்கிய புள்ளி... மீண்டும் சிக்குவாரா செந்தில் பாலாஜி?

அமலாக்கத்துறை குறி வைக்கும் முக்கிய புள்ளி... மீண்டும் சிக்குவாரா செந்தில் பாலாஜி?

அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

அமலாக்கத்துறைக்கு எதிராக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதில், மாநில அரசின் அனுமதி இன்றி டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோதமான பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது.  

இந்த சோதனைக்கு பிறகு, அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு குற்ற ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும் மதுபான கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதில், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.  

மேலும், மதுபான கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன சோதனையில் கணக்கில் வராத ரூ.1000 கோடிக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.  

இருதரப்பு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

#ed-raid#ed-raid-in-chennai#ed-raid-in-chennai-today#ed-raid-in-tamilnadu#ed-raid-in-tasmac#ed-raid-on-tasmac#ed-raid-tamil#ed-raid-tasmac#ed-raids#edraid#enforcement-directorate-raids-tasmac#it-raids-senthil-balaji#raid-in-tasmac-head-office#senthil-balaji-ed-raid#tasamc-ed-raid#tasamc-ed-raid-news#tasmac#tasmac-ed-raid#tasmac-ed-raid-latest-news#tasmac-head-office#tasmac-managing-director-raid#tasmac-raid#tasmac-scam#tasmac-under-raid