திமுக எம்.பி கனிமொழிக்கு சீமான் கேள்வி

திமுக எம்.பி கனிமொழிக்கு சீமான் கேள்வி

தமிழகத்தில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஈ.வெ.ரா.,வை திமுக தலைவர்கள் அண்ணா, கருணாநிதியை விட யாரும் அதிகம் விமர்சித்தது இல்லை. தமிழகத்தில் இத்தனை தொகுதிகள் இருக்கும் போது கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்? ஜாதியை ஒழிக்கவா? அங்கு ஏமாந்த மக்கள் இருக்கிறார்கள் அது தானே காரணம்.

தி.மு.க., கட்சி பெண்களுக்கு கொடுத்த முன்னுரிமை என்ன? அண்ணா பல்கலை வளாகத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. சாலைகளில் தி.மு.க., கொடி கட்டிய காரில் சென்று பெண்களை தொந்தரவு பண்ணுகிறார்கள். வண்டி இடித்ததால் துரத்தி போனதாக, பொய் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினீர்கள். நீதியை இன்றும் ஏன் நிலைநாட்டவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் எடுத்த நடவடிக்கை என்ன? கொடநாடு கொலையில் எடுத்த நடவடிக்கை என்ன? 5 பேர் உயிரிழந்ததுக்கு காரணம் என்ன? கொலை செய்தது யார்? இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

#kanimozhi#kanimozhi-about-seeman#kanimozhi-latest-speech#kanimozhi-mp-slams-seeman#kanimozhi-on-seeman#kanimozhi-seeman#kanimozhi-speech#kanimozhi-vs-seeman#latest-seeman-speech#periyar#seeman#seeman-angry-speech#seeman-best-speech#seeman-comedy-speech#seeman-erode-election-campaign-speech#seeman-kanimozhi#seeman-latest#seeman-latest-speech#seeman-latest-speech-about-kanimozhi#seeman-mass-speech#seeman-periyar-speech#seeman-press-meet#seeman-reply-to-kanimozhi#seeman-speech#seeman-speech-about-periyar#seeman-speech-latest#seeman-speech-tamil#seeman-speech-today#seeman-vs-dmk#seeman-vs-kanimozhi#seeman-vs-stalin