இரவு நேரங்களில் சத்தம் கூடாது - தமிழக அரசு உத்தரவு

இரவு நேரங்களில் சத்தம் கூடாது -  தமிழக அரசு உத்தரவு

குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்;

*குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது. 

*அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. 

*இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக் கூடாது.

*தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு.

*மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

*ஒலி மாசு நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#chennai-traffic-sound#city-traffic-sounds#highway-traffic-sound#incredible-india-traffic#incredible-indian-traffic#india-traffic#indian-traffic#indian-traffic-noise#indian-traffic-sound#lockdown-traffic-sound#sound-of-smooth-traffic#sound-of-traffic#sound-of-traffic-in-india#traffic#traffic-ambience#traffic-in-india#traffic-jam-sounds#traffic-noise#traffic-rider#traffic-sound#traffic-sounds#traffic-sounds-sleep#traffic-voice-sound