கார் சம்பவத்தை பார்க்கையில் நெஞ்சம் பதறுகிறது – அண்ணாமலை

கார் சம்பவத்தை பார்க்கையில் நெஞ்சம் பதறுகிறது – அண்ணாமலை

சென்னை ஈ.சி.ஆரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திச் சென்ற வீடியோவை காணும்போது நெஞ்சம் பதறுகிறது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு ஆணி துரும்பை கூட கிள்ளி போடாமல் தி.மு.க., அரசு இருக்கிறது செய்தியாளர்கள் தொலைபேசியை வாங்கி பார்ப்பதை முட்டாள் தனமான வாதமாக இருப்பதாகவும்,

செய்தியாளர்களை அச்சுறுத்தக்கூடாது. செய்தியாளர்களிடம் ஆதாரம் கேட்பதில்லை. ஒரு செய்தியாளர்களை அழைத்து அச்சுறுத்தல் செய்தால், தமிழகத்தில் நடக்கும் எந்த விதமான விஷயங்களையும் வெளியே கொண்டு வர பயப்படுவார்கள்.

செய்தியாளர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்து, சோதனை செய்வது ஊடகங்களுக்கு எதிராக தி.மு.க.,வின் மனப்பான்மையை காட்டுகிறது எனவும், முதல்வர் ஸ்டாலின் பகல் கனவில் இருக்கிறார். நாடக கம்பெனி போல தான் தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், எந்த காரணத்திலும் அவர்கள் ஆட்சிக்கு திரும்ப வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், மாவட்டம் மாவட்டமாக எவ்வளவு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை கணக்கு எடுத்து வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டியது தானே எனவும் சவால் விடுத்துள்ளார்.

#annamalai#annamalai-bjp#annamalai-dmk-files#annamalai-ips#annamalai-latest#annamalai-latest-speech#annamalai-news#annamalai-on-dmk#annamalai-protest#annamalai-vs-admk#annamalai-vs-dmk#annamalai-vs-udhayanidhi#bjp-annamalai#bjp-annamalai-vs-dmk#bjp-vs-dmk#chennai-ecr-girl-issue#dayanidhi-maran-vs-annamalai#dayanidhi-maran-vs-k-annamalai#dmk#dmk-flag-car-ecr-girl-issue#dmk-man-attack-women#ecr-girl-car-chasing-issue#ecr-girl-issue#ecr-girl-video#ecr-night-videos#ecr-videos#ecr-women-video#girls-fears#k-annamalai#k-annamalai-interview#k-annamalai-news-today#k-annamalai-vs-dmk#k-annamalai-vs-dmk-news#latest-tamil-news#latest-viral-videos#tamil-latest-news#udhayanidhi-vs-annamalai#viral-news#viral-video#viral-videos