கட்சி கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற உத்தரவு

கட்சி கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற உத்தரவு!

பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்' என மதுரை உயர்நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை விளாங்குடி, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அ.தி.மு.க.,கொடி கம்பம் நட அனுமதி கோரி, உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜன.,27) விசாரணைக்கு வந்தது. 

அப்போது பட்டா நிலத்தில் கொடிக்கம்பங்களை நிறுவலாம் அதற்குரிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் எனவும்

பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் எனவும்

தவறினால் அரசே அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கொடி கம்பம் நட அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டது.

#famous-political-parties#flag-of-political-parties#high-court-political-party-flag#iraq-political-party-flag-waving-animation#maduraihighcourt#party-flag#political#political-flags#political-parties#political-parties-flagpole-issue#political-party#political-party-flag#political-party-flag-loop#poltical-party#tamil-nadu-political-party#tn-political-party-flag-issue#vijay-new-political-party#vijay-political-party#vijay-political-party-flag#vijay-political-party-news