76-வது குடியரசு தின விழா……வரலாற்றின் சிறு தொகுப்பை தெரிந்து கொள்வோம்

76-வது குடியரசு தின விழா……வரலாற்றின் சிறு தொகுப்பை தெரிந்து கொள்வோம்

76 வது குடியரசு தின விழாவை கொண்டாடும் இந்த வேலையில் குடியரசு நாடு என்றால் என்ன என்பது குறித்தும், இந்திய அரசியலமைப்பு குறித்த சிறு தொகுப்பையும் தெரிந்து கொள்வோம்.

1950 இல் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதால், இந்தியா முழு உலகிற்கும் ஒரு குடியரசு தேசமாக நிறுவப்பட்டது. இந்தியா தனது குடிமக்களை சுதந்திரமான நிறுவனங்களாக அடையாளப்படுத்துவதால், நாட்டிற்கு பொறுப்புகள் மற்றும் ஆளும் குழுக்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளதால் அது குடியரசு நாடு என்று அழைக்கப்படுகிறது.

குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் உள்ள வித்தியாசம் என்பது  இந்தியா ஆகஸ்ட் 15, 1947 இல் சுதந்திரம் பெற்றது, ஆனால் 1950 இல் நாட்டின் அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை அது குடியரசாக இருக்கவில்லை.

பின்னர், சனவரி 26, 1950 முதல் இந்தியா ஓர் புதிய அரசியலமைப்புடன் சமயச் சார்பற்ற மக்களாட்சி குடியரசாக மலர்ந்தது. குடியரசு" என்ற வார்த்தையின் தனித்துவமான வரையறைகள் அமெரிக்காவில் தான் உருவானது, அங்கு இந்த வார்த்தை பெரும்பாலும் " பிரதிநிதித்துவ ஜனநாயகம் " உடன் சமப்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தையின் குறுகிய புரிதல் முதலில் ஜேம்ஸ் மேடிசன் என்பவரால் உருவாக்கப்பட்டது

இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்திற்கான விதிகளைக் கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட ஒரு அரசியல் அலகுக்கான, சட்ட விதிகள், கொள்கைகள் போன்றவற்றை விளக்கும் எழுத்துமூல ஆவணம் ஆகும்.

இந்த அரசியலமைப்பு முழுமையும் கையால் எழுதப்பட்டது.  அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத டாக்டர் பீ. ஆர். அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உருவாக்கப்பட்டது. இதில், பிரேம் பிஹாரி நரேன் ரைசாடா என்பவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை முழுவதுமாக கையால் எழுதியவர்.

இந்திய அரசியலமைப்பில் அடிப்படையானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம், அனைவருக்கும் சம பாதுகாப்பு, பொதுவேலைகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உரிமை என்பது தான்.

குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியாவின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ராணுவ அணி வகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறுவது வழக்கம்.

இதற்கு முன்னதாக குடியரசு தலைவர் டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார். முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும். 

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகன ஊர்திகள் இடம்பெறும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அணிவகுப்பு அமையும். மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவார்கள். மாநில அரசுகள் சார்பாக பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளும், சிறந்த முறையில் பணியாற்றிவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் இந்த தினத்தின்போது வழங்கப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் உலக நாடுகளின் பிரதமர் அல்லது அதிபராக இருப்பார்கள்.

இந்த முறை குடியரசு தினவிழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

#76th-republic-day#76th-republic-day-parade#happy-republic-day#kids-republic-day#mk-stalin#pm-modi#pm-modi-at-republic-day-2025#pm-modi-live#pm-modi-speech#rehearsel-for-republic-day-parade-at-kartavya-path#republic#republic-day#republic-day-2022#republic-day-2025#republic-day-2025-live#republic-day-celebrations#republic-day-craft#republic-day-essay#republic-day-events#republic-day-for-kids#republic-day-full-parade#republic-day-full-parade-2025#republic-day-kids#republic-day-parade#republic-day-parade-2024#republic-day-parade-2025#republic-day-parade-rehearsal-2025#republic-day-song#republic-day-status#republicday#rn-ravi#tamil-nadu