இஸ்ரோவின் புதிய தலைவர் நியமனம்…… தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இஸ்ரோவின் புதிய தலைவர் நியமனம்…… தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இஸ்ரோவின் புதிய தலைவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோமநாத்தின் பதவிக்காலம் ஜன.14ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

திருவனந்தபுரத்தில் உள்ள வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனராக நாராயணன் பணியாற்றி வருகிறார். இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் 2 வருடங்கள் அந்த பதவியில் இருப்பார்.

இஸ்ரோவின் புதிய தலைவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் அவர்கள் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

Chandrayaan2, Chandrayaan3, AdityaL1, Gaganyaan என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த – தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணன் அவர்களின் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணன் அவர்களின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” என குறிப்பிட்டுள்ளார்.

#chandrayaan-3-isro#dr-v-narayanan#isro#isro-chief#isro-chief-v-narayanan#isro-director-v-narayanan#isro-new-chairman-v-narayanan#isro-new-chief-dr-v-narayanan#nambi-narayanan#nambi-narayanan-interview#narayanan-appointed-as-new-isro#narayanan-appointed-as-new-isro-chairman#narayanan-isro-chairman#v-narayanan#v-narayanan-appointed-as-new-isro-chairman#v-narayanan-isro#v-narayanan-news#who-is-isro-new-chief-v-narayanan