எஸ்.வி சேகருக்கு சிறை தண்டனை உறுதி!

எஸ்.வி சேகருக்கு சிறை தண்டனை உறுதி!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து, 2018-ல் சமூக வலைதளங்களில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக, நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், எஸ்.வி.சேகர் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை, சென்னையில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

 

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும், 15,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

 

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில், இன்று (ஜன.,02) எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசம் வழங்கி, அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது' என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#annamalai-vs-sv-sekar#s-v-sekar#s-ve-sekar#s-ve-sekar-interview#s-ve-sekar-interview-latest#s-ve-sekar-latest#s-ve-sekar-latest-speech#s-ve-sekar-speech#s-ve-sekar-vs-annamalai#sv-sekar#sv-sekar-about-annamalai#sv-sekar-annamalai#sv-sekar-bjp#sv-sekar-comedy#sv-sekar-comedy-speech#sv-sekar-interview#sv-sekar-interview-latest#sv-sekar-latest-speech#sv-sekar-speech#sv-sekar-speech-latest#sv-sekar-vs-annamalai#sve-sekar-video