தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் டிச.,27 முதல் வரும் ஜனவரி 2ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

 

தெற்கு கேரளா, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

#ap-rains-latest-updates#ap-rains-updates#chennai-rain-today-live#chennai-rain-update#chennai-rain-updates#delhi-weather-update#heavy-rain#heavy-rain-alert#heavy-rains#heavy-rains-in-ap#heavy-rains-to-ap#hyderabad-rains-updates#imd-rain-alert#low-pressure-rain#low-pressure-rain-in-odisha#maharashtra-rain-update#odisha-rain#odisha-rain-news#otv-news-updates#rain#rain-alert-to-ap#rain-in-odisha#weather-update