விண்ணில் ஏவ தாயார் நிலையில் உள்ள பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட்

விண்ணில் ஏவ தாயார் நிலையில் உள்ள பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட்

பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் வரும் டிசம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ, இஸ்ரோ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

 

பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் வரும் டிசம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது.எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது.

ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நேர் நிறுத்தப்பட்டுள்ள ராக்கெட்டின் உட்பகுதியில் இரு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

#blastoff-pslv-c59-rocket#india-rocket#indian-rocket#indian-rockets#indias-pslv-rocket#indias-pslv-rocket-launch#isro-launches-rocket#isro-pslv-c54-rocket#isro-rocket#isro-rocket-launch#isro-rocket-launch-live#isros-pslv-c54-rocket#pslv-c54-rocket#pslv-rocket#pslv-rocket-launch#pslv-rocket-launch-today-live-video#pslv-rocket-news#pslv-rocket-today-news#rocket#rocket-engine#rocket-engines#rocket-launch#rocket-launching#rockets