3 குரங்குகள் வதந்திகளை பரப்புகிறது – நயன்தாரா

3 குரங்குகள் வதந்திகளை பரப்புகிறது – நயன்தாரா

நடிகை நயந்தாராவின் 40 வது பிறந்தநாளையொட்டி அவரது திருமண காட்சிகளுடன் அவர்களது காதல் வாழ்க்கை குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிடப்பட்டது.

இதில் நானும் ரவுடிதான் படக்காட்சிகள், பாடலை பயன்படுத்த நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தியதாக நயந்தாரா 3 பக்கம் கடிதம் வெளியிட்டிருந்தார்.

இது குறித்து யூடியூப்பில் நயந்தாராவுக்கு எதிராகவும் தனுஷூக்கு ஆதரவாகவும் சில யூடியூப்பர்கள் பேசி வந்தார்கள்.

இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள நயந்தாரா,

யூடியூப்பில் 3 நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு 50 எபிசோடுகள் வெளியிட்டால் அதில் 45 என்னைக் குறித்ததாகவே இருக்கும். ஏனென்றால் என்னைக் குறித்து பேசினால் அதிகமான பார்வைகள் கிடைத்து அதனால் பணம் சம்பாதிக்கிறார்கள். என்னை வைத்து அல்லது எனது பெயரினால் மற்றவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள்.

வதந்திகளை மட்டுமே பேசி அந்த மூவர் பணம் சம்பாதிக்கிறார்கள். நான் அவர்களை தேவையில்லாமல் பிரபலம் ஆக்குகிறேன்.

நாம் 3 குரங்குகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஒன்று பொய் பேசாது, ஒன்று தவறானதை கேட்காது, ஒன்று தவறானதை பார்க்காது. ஆனால் இந்த 3 குரங்குகள் அதற்கு எதிராக இருக்கும்.

பொய் மட்டுமே பேசும், தவறானதை மட்டுமே கேட்கும், தவறானதையே பார்க்கும்.

பேச்சு என்று பெயர் வைத்திருப்பார்கல். அவர்கள் அங்கேயே தான் இருப்பார்கள். ஆனால் என்னைக்குறித்து அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது போலவே பேசுவார்கள் என நயந்தாரா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். 

#actordanush#actressnayanthara#nanumroudythan#nayantharaspeech#ottnetfilx#tamilcinema#vigneshsivan#vijaysethupathi#youtube