அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைத்தால் பொருளாதாரம் உயரும்!

அனைவருக்கும் சமமான  வாய்ப்பு கிடைத்தால் பொருளாதாரம் உயரும்!

பொருளாதார பலன்கள் சில கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையாது என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு 5.4% ஆக குறைந்துள்ளது.

சில கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே பொருளாதார பலன்கள் சேரும் வரை நாட்டின் பொருளாதாரம் முன்னேறாது.

விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் பொருளாதார பிரச்சனையில் சிக்கி கொண்டிருக்கிறார்கள்.

பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி ஆகியவற்றால் உற்பத்தி துறையின் பங்கு வெறும் 13% குறைந்துள்ளது. இது 50 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் போது, பொருளாதாரத்தின் சக்கரம் முன்னேறும் என குறிப்பிட்டுள்ளார்.

#bjp#congress#economic#india#indianpolitical#live#lok-sabha#lok-sabha-speaker#modi#om-birla#parliament#parliament-winter-session#parliament-winter-session-2024#parliament-winter-session-day-5#pm-modi#priyanka-gandhi#priyanka-gandhi-in-parliament#priyanka-gandhi-news#ragulgandhi#rahul-gandhi-news#rahul-gandhi-on-om-birla#rahul-gandhi-speech#rahul-gandhi-speech-in-lok-sabha#rahul-gandhi-speech-in-parliamentrahul-gandhi-speech-in-parliament-live