புதிய சாதனை படைத்த ரொனால்டோ! Cristiano Ronaldo

புதிய சாதனை படைத்த ரொனால்டோ!  Cristiano Ronaldo 

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சமீபத்தில் ஒரு UEFA நேஷன்ஸ் லீக் போட்டியில் 900 கோல்கள் அடித்த வரலாற்றுச் சாதனை படைத்ததோடு, சமூக ஊடகங்களில் ஒரு பில்லியன் பின்தொடர்பவர்களை கடந்துள்ளார்.
X தளத்தில் ரொனால்டோ தன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.


அந்த பதிவில் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட ரொனால்டோ, “மடீராவின் தெருக்களிலிருந்து உலகின் மிகப்பெரிய மேடைகளுக்கு, நான் எப்போதும் என் குடும்பத்திற்காகவும் உங்களுக்காகவும் விளையாடியிருக்கிறேன். இப்போது நம்மில் 1 பில்லியன் பேர் ஒருங்கிணைந்திருக்கிறோம். எல்லா சூழலிலும் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். இந்த பயணம் நம்முடைய பயணமாகவே மாறியது, நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறோம்.” என்று கூறினார்.
அவரின் சமூக ஊடக பின்தொடர்புகளில் 600 மில்லியனுக்கும் மேல் இன்ஸ்டாகிராமில், 100 மில்லியனுக்கும் மேல் X தளத்தில், 170 மில்லியன் பேஸ்புக்கில், மேலும் 60 மில்லியன் யூடியூபில் உள்ளனர்.


இறுதியாக ரொனால்டோ கூறியதாவது, “என்னிடம் நம்பிக்கை வைத்ததற்காகவும், உங்கள் ஆதரவை வழங்கியதற்காகவும் நன்றி” என அவர் பதிவிட்டுள்ளார்.

#1-billion-followers#1-billion-followers-ronaldo#1-billion-subscriber-youtube-channel#channel-5-news#channel-5-tamil#cr7-youtube-channel#cristiano-ronaldo#cristiano-ronaldo-1-billion-followers#cristiano-ronaldo-1-million-followers#cristiano-ronaldo-channel#most-famous-person-in-the-world#most-followed-instagram-accounts#most-followed-person-on-all-social-media#most-followers-in-instagram#most-subscribed-youtube-channel#ronaldo-1-billion-followers#ronaldo-1-million-followers