PM Speaks To Joe Biden, Discusses Ukraine Trip, Safety Of Hindus In Bangladesh
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் போலந்து மற்றும் உக்ரைனுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தின் போது, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் சந்தித்து பேசினார். இந்த பயணத்திற்குப் பின்னர், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலைபேசியில் உரையாடினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, வங்கதேசத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல் குறித்தும், உக்ரைன் போரை நிறுத்துவது குறித்தும் விரிவாகப் பேசினோம்," என்று தெரிவித்துள்ளார்.
