பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி | Bus Accident In Nepal
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் 40 பேருடன் சென்ற இந்திய பயணிகள் பஸ், மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.
“UP IT 7623” என்ற எண் கொண்ட பஸ் ஆற்றின் கரையில் கிடக்கிறது என்று டிஎஸ்பி தீப்குமார் ராயா உறுதிபடுத்தினார். இந்த விபத்தில் 40 பயணிகளில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
