'விடாமுயற்சி' படத்தின் Update! Vidamuyarchi | Ajithkumar

'விடாமுயற்சி' படத்தின் Update! Vidamuyarchi | Ajithkumar

நடிகர் அஜித் குமார் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ எனும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘துணிவு’ படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது.

சமீபத்தில் ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அஜர்பைஜானில் படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பியது. தற்போது, ‘விடாமுயற்சி’ படத்தின் ஒரே ஒரு பாடல் ஷூட் மட்டும் நிலுவையில் இருந்தது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்கள் நடைபெற்று, தற்போது படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இதற்குப் பிறகு படத்தின் புரொடக்ஷன் வேலைகள் தொடரும்.

‘விடாமுயற்சி’ படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் குமார் நடிக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், சில காட்சிகளில் அஜித் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#actor-ajith#ajith#ajith-360#ajith-at-airport#ajith-bike-trip#ajith-family#ajith-kumar#ajith-kumar-latest#ajith-kumar-latest-video#ajith-latest#ajith-latest-news#ajith-latest-video#ajith-new-movie#ajith-news#ajith-next-movie#ajith-shalini#ajith-shooting-spot-video#ajith-today-news#latest-ajith-updates#shalini-ajith#thala-ajith#விடாமுயற்சி#விடாமுயற்சி-படத்தின்-புதிய-அப்டேட்#விடாமுயற்சி-படம்