‘சென்னை ஸ்டோரி’ படத்தில் Samantha க்குப் பதிலாக Shruti Haasan நடிக்கிறார் - Channel 5 Tamil

ஹாலிவுட் டைரக்டர் பிலிப் ஜான் இயக்கவுள்ள சென்னை ஸ்டோரி படத்தில் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த படத்தில் இருந்து சமந்தா விலகிக் கொண்டதாகவும் ,அதற்கு பதிலாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. ஆங்கிலத்தில் உருவாகும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் டிடெக்டிவ் ரோலில் நடிக்கிறார். இந்த படம் குறித்து ஸ்ருதிஹாசன் வெளியிட்ட செய்தியில், நான் சென்னை பொண்ணாக இருப்பதால், சென்னையின் தனித்துவத்தை காட்டப் போகும் இந்த படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் சமந்தா மயோசிட்டீஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டிருப்பதால் தான் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்கள்.