காமராஜர் 122வது பிறந்த நாள் | காமராஜர் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் திரு.கே.என். நேரு
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (15.07.2024) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள்
இந்நிகழ்வில் மாநகரச் செயலாளரும் மற்றும் மாநகராட்சி மேயருமான திரு.மு.அன்பழகன் அவர்கள், மத்திய மாவட்டச் செயலாளர் திரு.வைரமணி அவர்கள் உடனிருந்தார்கள். இதில் பகுதிச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், இந்திய நாடார் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
